ஆலங்குடி அம்புலி ஆறு பகுதியில் உள்ள சாலை புதுக்கோட்டை பேராவூரணி தேசிய நெடுஞ்சாலை என்பதால் இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் இரவு நேரத்தில் செல்லும் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதனால், ஆலங்குடி நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.