புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், புள்ளான்விடுதி ஊராட்சிக்குட்பட்ட மேலப்புள்ளான்விடுதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.