புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் தேவிஸ்ரீ (16). பி. மாத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தேவிஸ்ரீயை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சம்மட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.