கல்லாக்கோட்டை ஊராட்சி, இடையன் கொள்ளைப்பட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக குடிநீருக்காக மிகுந்த சிரமத்திற்குள்ளான கிராம பெண்கள் காலி குடங்களுடன் கறம்பக்குடி - கந்தர்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கந்தர்வகோட்டை போலிசார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் கைவிடப்பட்டது.