ஆலங்குடி நூலகத்தில் ”புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சி

70பார்த்தது
ஆலங்குடி நூலகத்தில் ”புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்ச்சி
ஆலங்குடி முழு நேர கிளை நூலகத்தில் வாசகர் வட்டமும், நூலகமும் இணைந்து நடத்திய புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் பாபுஜான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வாசகர் வட்ட உறுப்பினர்கள், அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.

இதில், தமுஎகச பொறுப்பாளர் ரமா ராமநாதன், துணைத் தலைவர் நீலா, ஓய்வு பெற்ற உதவித்தொடக்கல்வி அலுவலர் கருப்பையா, நாணயக் கழகத் தலைவர் பசீர் அலி, நூலகர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து பேசினர். தொடர்ந்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கிய ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை பேரூராட்சித்தலைவர் ராசி நூலகத்திற்கு வழங்கினார். முடிவில், நூலகர்கள் சுடர் வேல் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி