ஆலங்குடியில் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம்

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் பூங்கா கலையரங்கம் பகுதியில் ஆலங்குடி பேரூர் கழக சார்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா நேற்று (ஜூன் 9) மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி மற்றும் திருச்சி சிவா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என தெரிவித்தார். இதில் திராவிட கழக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி