புதுக்கோட்டை, வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை ஜூன் 9 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்ப்பட்டி, அக்கல் நாயக்கன் பட்டி, கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, வளதாடிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.