ஆலங்குடி அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி!

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்த்தவர் சின்னப்பிள்ளை (65). இவர் ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து புதுகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி