விளையாட்டால் விபரீதம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை!

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பூவரசகுடி கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (28) எதிர் வீட்டைச் சேர்ந்த ஸ்ரீகாவை (24) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் சரத்குமார். இவரது மனைவி ஸ்ரீகா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவருக்கு தெரியாமல் ஆன்லைனில் ட்ரீம் 11 விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததாகவும், கணவன் கண்டித்த பிறகும் ஸ்ரீகா மீண்டும் ட்ரீம் 11 விளையாட்டில் 70 ஆயிரம் ரூபாய் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. கணவன் வேலை பார்த்து அனுப்பிய பணம் பேங்க் அக்கவுண்டில் இல்லாததை அறிந்து, மனைவியிடம் விசாரித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவர் வீட்டின் எதிரே உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தை இறந்த நிலையில் பெட்ஷீட்டில் மூடப்பட்டு கிடந்ததை அருகில் இருந்தவர்கள் தகவல் அறிந்து வல்லத்திரகோட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த சிறுமியின் உடலை மீட்டதுடன், வீட்டின் மற்றொரு அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்த ஸ்ரீகாவின் உடலையும் மீட்டுள்ளனர். இரண்டு உடல்களையும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி