புதுக்கோட்டை திருவரங்குளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். இன்று (ஜூன் 11) காலை நடைபெற்ற இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.