புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ பயின்று வந்தவர் சௌமியா. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் விடுமுறை அன்று கரம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி உள்ள இல்லத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள் உறவினரின் துக்கத்திற்காக வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் தங்களது மகள் சௌமியாவிடம் டிசம்பர் 25 அன்று மாலை ஏழு மணி அளவில் அழைப்பேசியில் பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் அன்றைய தினமே இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகள் சௌமியாவை காணவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் மறுநாள் டிசம்பர் 26 காலை வடகாடு காவல் நிலையத்தில் சௌமியாவின் பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் சௌமியா இறந்து கிடந்துள்ளார். சௌமியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெற்றோர்கள் குற்றவாளி யார் என்று கண்டுபிடித்து அவருக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே உடலை பெறுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் மகள் சௌமியாவின் இறப்பில் மணிகண்டன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர்.