புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பேரணியானது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சீனி கடை முக்கம், அன்புக் கோவில் முக்கம், டோல்கேட் வீதி, டிஎல்சி ரோடு வழியாக நடைபெற்றது.