ஆலங்குடி, குப்பக்குடியைச் சேர்ந்த ராஜு (61) என்பவர் அரிமளத்திலிருந்து குப்பக்குடியில் உள்ள அவர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலக்கோட்டை ஆர்ச் என்ற இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.