ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆலங்குடி போலீசார் துவார், குன்னக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது துவார் குளவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராசு (75) என்பவர் மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்வராசை கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.