புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இன்றும் காலை முதலே வெயில் அடிப்பது பிறகு சாரல் மழை பெய்வதுமாக இருந்தது. இந்நிலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் சாரல் மழையால் ஆலங்குடி அதை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.