கறம்பக்குடி அருகே மைலன்கோன்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் திவ்யா. இவர் கடந்த 2019ம் ஆண்டு மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங் கலை 3ம் ஆண்டு படித்து வந்தபோது, சென்னிய விடுதியை சேர்ந்த ராமன் என்பவர் பின்தொடர்ந்து சென்று ஆபாசமாக பேசியதுடன், பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இதை தட்டிக்கேட்ட திவ்யாவின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ராஜேந்திரனையும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து ராமனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுகதேவ் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்ட ராமனுக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டை யும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண் டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.