கறம்பக்குடியை அடுத்த பாப்பான் விடுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (27). கறம்பக் குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் பாப்பான்விடுதியை சேர்ந்த பாலதர்ஷ்னி என்பவரை கடந்த 8 ஆண்டாக காதலித்து வந்தார். சம்பவத்தன்று இருவரும் செல்போனில் பேசிய போது, வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கறம்பக்குடி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பெரிய குளத்து கரையில் உள்ள கரு வேல மரத்தில் வேட்டியால் தூக்குமாட்டிய நிலை யில் மனோஜ்குமார் இறந்து கிடந்தார். தகவலறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, தற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் மனோஜ்குமார் என்பது தெரிய வந்தது.