புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, காட்டு மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, பிச்சி, செண்டி, கோழி கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் சாகுபடிகள் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டனர். தற்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.