புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த ராஜகோபால் தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி விரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.