புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கீழாத்தூர் சாந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், (80), இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பதாக வந்த புகாரையடுத்து அங்கு சென்ற வடகாடு காவல் சிறப்பு படையினர், வடகாடு ராஜா டீக்கடை அருகே கார்த்திகேயன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் விசாரித்ததில் மூன்று இலக்க ஆன்லைன் லாட்டரி சீட்டு, வயரிங் பேப்பர், 3, 830 ரொக்கம், பட்டன் செல் ஒன்று, அவரிடம் இருந்து கைப்பற்றினர். பின்பு வடகாடு காவல்துறையினர் கார்த்திகேயனை விசாரணை செய்து ஜாமினில் விடுவித்தனர்.