புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டி, மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமையில் இன்று கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் இளவரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.