புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதிகளில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கைகாட்டி பகுதியில் காசிம்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இப்ராம்ஷா மற்றும் முகமது சாசும்(30) என்பது தெரிய வந்தது. இதில் அவர்களிடம் இருந்து 12 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 1. 200 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்