புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோவில் வைரத்தேர் திருவிழா சில காரணங்களால் 3 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் மா, பலா, வாழை என முக்கனிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரினில் அம்மன் உலா வர பக்தர்கள் உற்சாகத்தடன் தேரினை இழுத்து வந்து நிலை நிறுத்தினர்.