ஆலங்குடி அருகே உள்ள வம்பனில் வீரமாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு 67வது ஆண் டாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், புதுக்கோட்டை, ராமநாதபு ரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து மொத்தம் 32 மாட்டு வண்டிகள், பெரிய மாடு, கரிச் சான் மாடு, தேன் சிட்டு மாடு, நடு மாடு, ஒற்றை மாடு, பூஞ்சிட்டு மாடு
என்று 6 பிரிவுகளாகவும், பந்தயம் நடத்தப்பட்டது.
முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளின் சாரதிகள், உரிமையாளர்களுக்கு ரொக் கப்பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மாஞ்சான்விடுதி, கொத்தக்கோட்டை ஊராட்சி கமிட்டியினர் வழங்கினார்.
பந்தயத்தை ஆலங்குடிபுதுக் கோட்டை சாலையின் இருபுறமும் நின்று நுாற்றுக்கணக்கான பார்வையா ளர்கள் பார்த்து ரசித்தனர்.