புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எஸ். கலபம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு (55). நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.