இரண்டாவது குருஸ்தலமாக விளங்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு நேற்று ஆடி வியாழனை முன்னிட்டு குரு தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி பகவானை தரிசித்து சென்றனர்.