ஊராட்சியின் உறுப்பினரின் உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பு.

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி ஊராட்சியின் நான்காவது வார்டு உறுப்பினராக முருகேசன் என்பவர் இருந்து வருகிறார்.
இவர் தங்களது ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஊழல் செய்வதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், போலியான தீர்மானங்கள் மூலம் ஊராட்சியின் பணத்தை கொள்ளை அடிப்பதாக குற்றம்சாட்டியும், இதனை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களையும் கண்டித்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முருகேசன் என்பவரிடம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி துறை ரீதியான அதிகாரிகளுடன் இணைந்து ஒரு வாரத்திற்குள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி