புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த குமார் (39), சிக்கப்பட்டியை சேர்ந்த காளிதாஸ் (43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மது பாட்டில்கள், ரூ. 3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.