உலக கடல் தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தம் செய்த இளைஞர்கள்

53பார்த்தது
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா மாநிலம் என்பதால் வார இறுதி நாட்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவது வழக்கம். அவ்வாறு இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றும் உணவு பொருட்கள் பயன்படுத்தும் பொருட்களை கடற்கரையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரை முழுவதும் குப்பைமேடாக காட்சி அளிக்கும். சுற்றுலா மாநிலமான புதுச்சேரியை தூய்மையாகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உலக கடல் தினத்தை முன்னிட்டு இம்பேக்ட் குரு பவுண்டேஷன் மற்றும் ஈரம் கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி நிறுவனம் சார்பில் கடற்கரை தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் கதிரவன் தலைமையில் ஈரம் நிறுவனர் ஏசுதாஸ், ஒருங்கிணைப்பாளர் மதன் ஸ்ரீ ராம் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு கடற்கரையில் தேங்கி இருந்த குப்பைகளை சுத்தம் செய்து தூய்மை பணி மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி