புதுவையில் B. sc நர்சிங் படிப்பிற்கு 14ம் தேதி எழுத்து தேர்வு

75பார்த்தது
புதுவையில் B. sc நர்சிங் படிப்பிற்கு 14ம் தேதி எழுத்து தேர்வு
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் B. Sc (Nursing) படிப்பிற்கு சென்டாக் (CENTAC) அரசு ஓதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 14. 07. 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதுச்சேரியில் 6 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் 2 தேர்வு மையங்களிலும், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் தலா 1 தேர்வு மையங்களிலும் நடத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் https: //www. centacpuducherry. in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து 10. 07. 2024 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இது தொடர்பாக ஏதேனும் விவரம் (அ) உதவி தேவைப்பட்டால்,
தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல்மாலை 5 மணி வரை 0413-2229355 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.

புதுச்சேரி நலவழி மற்றும் குடும்ப நல இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி