பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள்

80பார்த்தது
புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதியில் உள்ள கொத்தம்புரிநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருபுவனை பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக பள்ளியில் மாலை வேளையில் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து மாணவர்களுக்கு இரவு உணவுகளை வழங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சொந்த செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வித்துறையின் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிறுதானிய சிற்றுண்டியை வழங்கி மகிழ்ந்தார். மேலும் நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி