புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் போது பேசிய திதுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, EWS மக்கள் தொகை மற்றும் அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகள் குறித்து என கேள்வி எழுப்பினார். மேலும். EWS-க்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அப்போது திமுக எதிர்கட்சி தலைவர் எழுந்துநின்று EWS இடஒதுக்கீட்டில் பல தவறுகள் நடக்கிறது. தேடி தேடி அந்த மக்களை கண்டுபிடித்து கொண்டு வருகின்றனர் என கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, EWS இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசை கேட்டு முடிவு எடுக்கப்படும். EWS குறித்து இதுவரை கணக்கெடுப்பு விகிதம் இல்லை. மீனவ சமுதாயம் மக்கள் மீது அரசுக்கு அக்கறை உள்ளது. மீனவ சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு கண்டிப்பாக பெறுவோம் என பதிலளித்தார்.