புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடற்கரைப் பகுதியில் சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர். அரசின் இந்த முன்னெடுப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.