புதுவை பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்பு

50பார்த்தது
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சரும், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா மற்றும் மாநிலத்தின் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி