புதுச்சேரி மாநில அனைத்து பட்டியலின மக்கள் இயக்கம் சார்பில் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது திடீரென மத்திய அமைச்சர் அர்ஜுனராம் மேக்வால் மேடையில் ஏறி இசை கலைஞர்களுடன் அமர்ந்து நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய என பாடல் பாடினார். மத்திய அமைச்சர் பாடல் பாடியதை எதிரே அமர்ந்திருந்த சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கைதட்டி அவர்களும் பாடல் பாடினர். அமைச்சர் பாடல் பாடிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.