புதுச்சேரி அரசு சார்பில் காந்தி திருவுருவச்சிலைக்கு மரியாதை

61பார்த்தது
தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் இன்று (அக்.,2) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் J. சரவணன்குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பிரகாஷ் குமார், வெங்கடேசன், அசோக் பாபு, தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஷாலினி சிங், அரசுச் செயலர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மும்மத பிரார்த்தனை நிகழ்ச்சியும் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேசபக்திப் பாடல்கள் நிகழ்ச்சியும், புதுச்சேரி கதர் மற்றும் கிராமத் தொழில் வாரிய ஊழியர்களின் நூல் நூற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி