புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பெயர் பலகைகளில் தமிழ் பெயர் அதிகம் இல்லை. கட்டாயம் வைக்க வேண்டும் என உறுப்பினர் நேரு பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம். நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெயர் பலகையில் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நமது உணர்வு.