18 பிரதம கூட்டுறவு விவசாய சங்கங்களுக்கு டிராக்டர்கள்

1039பார்த்தது
18 பிரதம கூட்டுறவு விவசாய சங்கங்களுக்கு டிராக்டர்கள்
புதுச்சேரி அரசு, கூட்டுறவுத் துறை மூலம் விவசாய கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் (2023-24) புதுவை பிராந்தியத்தில் செயல்படும் 16 பிரதம கூட்டுறவு விவசாய சங்கங்கள் மற்றும் காரைக்கால் பிராந்தியத்தில் 2 பிரதம கூட்டுறவு விவசாய சங்கங்களுக்கும் டிராக்டர் கொள்முதல் மானியமாக தலா ரூ. 4. 35 இலட்சம் முதல் 4. 50 இலட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் மேற்கூறிய அனைத்து 18 பிரதம கூட்டுறவு விவசாய சங்கங்களுக்கும் டிராக்டர்களை வழங்கினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் K. S. P. ரமேஷ், கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி