புதுவை அரியாங்குப்பம் நோணாங்குப்பத்தில் அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் படகு குழாம் உள்ளது.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்த இடமாக படகு குழாம் உள்ளது. இங்கு வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை, தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். நோணாங்குப்பம் படகு குழாமிலிருந்து ஆற்றில் படகு மூலம் பேரடைஸ் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்வார்கள். நீண்ட கியூ வரிசையில் நின்ற படகில் செல்வார்கள்.
இந்த பேரடைஸ் கடற்கரையில் மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. இங்குள்ள கடைகளில் உணவுப்பொருட்கள், ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குளிர்சாதன பொருட்கள், உணவு தயாரிக்க மின் அடுப்புகள் ஆகியவற்றுக்கு மின்சாரம் தேவை. மாலையில் சுற்றுலா பயணிகள் படகு குழாம் திரும்ப விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இங்கு மின்விளக்குகள் எரியவில்லை.
இதற்கு மின்சாரம் இல்லாததுதான் காரணம் என தெரியவந்துள்ளது. ஏனெனில் கேபிள் மூலம் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் நேற்று முதல் மின்சாரம் தடைபட்டது. வார இறுதி விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மின்சாரம் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்