திருவாரூரில் இருந்து புதுச்சேரியை நோக்கி சுற்றுலா பயணிகளை ஏற்றுக்கொண்டு சுற்றுலா மினி வேன் வந்தது. வில்லியனூர் பகுதியை அடுத்த சேந்தநத்தம்- உளவாய்க்கால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது. அப்போது பைக் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாடை இழந்த வேன் நிலை தடுமாறி நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த சுமார் 10-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு அனைவரும் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடுரோட்டில் கவிழ்ந்த வேனை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் நடுரோட்டில் வேன் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.