புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கான நேரம் மாற்றியமைப்பு.

63பார்த்தது
புதுச்சேரி அரசு பள்ளிகளுக்கான நேரம் மாற்றியமைப்பு.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு ஏற்ப பள்ளியின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்பம், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலை 8. 45 மணிக்கு பதிலாக
காலை 9 மணிக்கு பள்ளிகள் துவங்கும். மாலை 4 மணிக்கு பதிலாக
மாலை 4: 20 மணிக்கு பள்ளி வகுப்புகள் நிறைவு பெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. காலை இடைவேலை காலை 10. 45 மணி முதல் 10. 55 வரையும். உணவு இடைவேளை 12. 25 முதல் 1. 30 வரை விடப்படுகிறது.

இரண்டாவது இடைவேளை மதியம் 2: 50-லிருந்து 3 மணி வரை விடப்படுகிறது.

இந்த புதிய நேரம் மாற்றம் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி