லாரி மீது பைக் மோதியதில் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள் பலி

84பார்த்தது
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில், குணசீலன், கடப்பேரி குப்பம் சரண்ராஜ் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் கட்டிட வேலை மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று பத்துகண்ணு பகுதியில் இருந்து சுமார் 7 மணி அளவில் கடப்பேரிகுப்பம் வழியாக குயிலாபாளையம் செல்ல பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக புதுச்சேரி அடுத்த சேதராபட்டு, பத்துக்கண்ணு சாலையில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் மீது மூன்று இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளனர். விபத்தில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலே தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தனர். இந்த தகவலை அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் 3 இளைஞர்களும் அதீத குடிபோதையில் வாகனத்தில் சென்றுள்ளனர். குடித்தது மட்டுமில்லாமல் பத்து டின் பீர் பைக்கில் வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் போதை அதிக அளவில் தலைக்கு ஏறியதின் காரணமாக நிதானம் தவறி சாலை ஓரம் நின்று இருந்த வாகனத்தின் மீது மோதி தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இருந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி