புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தக சுமையை போக்கும் வகையிலும், மன அழுத்தம் ஏற்படாத வகையில் மாதத்தின் கடைசி நாளில் புத்தக பை இல்லா தினம் (bagless day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாணவர்கள் புத்தக பைகள் இல்லாமல் பள்ளிக்கு வருகை தந்து கைவிணை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி நகர பகுதியில் உள்ள எக்கோல் ஆங்கிலஸ் அரசு தொடக்க பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் முதன் முறையாக AI தொழில் நுட்பம் மூலம் செல்ல பிராணி மற்றும் காட்டு விலங்குகளை மாணவர்கள் அதனை தொட்டும், அதன் மீது ஏறி அமர்ந்தும் அந்த விலங்கை பற்றியும், அதன் குணாதிசயங்கள் பற்றியும் விளக்கினர். காட்டில் உள்ள விலங்குகளை தங்கள் அருகில் இருப்பதை பார்த்தும் அதனை தொடுவதும் மாணவர்களுக்கு புது வகையான அனுபவத்தை ஏற்படுத்தியது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.