புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறைவடைந்த நிலையில் 6 மாத இடைவெளிக்குப்பின் இன்று (புதன்கிழமை) காலை 9. 30 மணிக்கு மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து தொடங்கிவைத்தார். இன்றைய கூட்டத்தில் முதலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், புதுவை முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம். எல். ஏ. க்கள் நீலகங்காதரன், காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து 2025-2026 நிதியாண்டிற்கான அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் அரசுத்துறைகளின் தணிக்கை அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுகிறது. கூட்டம் இன்று ஒருநாள் மட்டும் நடக்கிறது.