இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்

53பார்த்தது
இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் வலியுறுத்துகிறோம்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாத பணியிடங்களைத் தற்போது நிரப்பும் போது இடஒதுக்கீடு அளிக்காதது ஏற்புடையதல்ல. இச்செயல் பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் காத்துக் கிடக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கும் அநீதியாகும்.

70 சதவீத மக்களின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் ஒரு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரியின் செயலுக்குப் புதுச்சேரி அரசு துணைப் போவது கண்டிக்கத்தக்கது. இது வாக்களித்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், சமூக நலத்துறைச் செயலர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளோம்.

தொடர்புடைய செய்தி