UDC-ஆக தேர்வு செய்யபட்டவர்களுக்கு பணியானை வழங்கிய முதல்வர்

54பார்த்தது
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 23. 07. 2023 அன்று நடத்தப்பட்ட மேல் நிலை எழுத்தர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 255 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இதுவரை 234 நபர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, காத்திருப்போர் பட்டியலில் இருந்து 13 நபர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாணைகளை வழங்கினார். உடன் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி