அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்மாள் தோட்டம் பகுதியில் எழுந்தருளி உள்ள முத்துமாரியம்மன் ஆலய ஆடி மாத திருவிழா நடைபெற்றது. விழாவில் அஇஅதிமுக மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டார். தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு சில்வரில் பூஜை கூடை வழங்கினார். அப்போது கோவில் நிர்வாகிகள் குமரேசன், பார்த்திபன், மணிகண்டன், அருள், ஏழுமலை என்கிற முனியப்பன் ஆகியோர் ரவி பாண்டுரங்கன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் தொகுதி கழக செயலாளர் ராஜா, அவைத்தலைவர் ராஜேந்திரன், வார்டு துணை செயலாளர் அன்பு, விஷ்வா ஆகியோர் உடன் இருந்தனர்.