புதுச்சேரி, நகரப்பகுதியில் உள்ள சர்க்கிள் தி பாண்டிச்சேரி சார்பில் சீனியர் டென்னிஸ் போட்டிகள் சர்க்கிள் தி பாண்டிச்சேரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, ஹைதராபாத், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நாளை நடைபெறும் பரிசளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். தொடர்ந்து இலவச கண் மருத்தவ பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆகியவை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமினை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்து அவரும் கண் பரிசோதனை செய்துக் கொண்டார். தொடர்ந்து 100- க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கண் பரிசோதனை செய்துக்கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சர்க்கிள் தி பாண்டிச்சேரியின் தலைவர் சதா, செயலாளர் பிரகாஷ், மற்றும் விளையாட்டு பிரிவின் செயலாளர் மத்தேயுஸ், கேப்டன் செந்தில்குமார் மற்றும் மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.