செல்போன் மாடல்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்த ஆசிரியர்

69பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த அரசு பள்ளி ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தனது வீட்டில் வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாதிரி செல்போன்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இந்து மதத்தினை பின்பற்றி வரும் அவர் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து 12-வது வருடமாக இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்காக தனது வீட்டில் வித்தியாசமான முறையில், இணையவழி குற்றங்களை தடுக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாதிரி செல்போன்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளார். இதில் சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், யூ டியூப் போன்ற வலையதள முகப்புகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில்களையும், அதனுள் குழந்தை ஏசு மற்றும் பல்வேறு பொம்மைகளை பொறுத்தியுள்ளார். மேலும் இணையவழி குற்றங்கள் நடந்தால் புதுச்சேரி சைபர் க்ரைமுக்கு தெரிவிக்கு புகார் எண் 1930 மற்றும் மின் அஞ்சல் முகவரியை எழுதியுள்ளார். மேலும் கிறிஸ்மஸ் தாத்தா இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல கையில் செல்போனில் இணையதளத்தை உலாவுவது போன்ற காட்சியும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்த குடிலை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி