புதுச்சேரி மாநிலத்தில் திடீரென பெய்த மழை

61பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் மக்கள் குளிர்பானம் உள்ளிட்ட குளிர்ச்சியான பானங்களின் கடைகளில் அதிகம் குவிந்தனர். மேலும் வெளியே செல்லும் வாகன ஓட்டிகளும் முகத்தை மூடிய படியும், தலையில் கேப் அணிந்தபடி சென்றனர். இந்நிலையில் புதுச்சேரி இரவு திடீரென பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மாநிலம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி